Pages

Monday, 28 April 2014

ஈருடல் ஓருடலாய்..


ஈருடல் ஓருடலாய்..
******************
எட்டிப்பிடிக்க முடியா மலைக்குன்றுகளும்
தொட்டுக்கொள்ள முடியா செங்கதிர்க்கோல்களும்
தள்ளிநின்று சிரித்த ஆற்றங்கரைகளும்
அவள் மனதில் சந்தோஷத்தையே கூட்டியிருந்தது

கற்றுத்தெளியாப் பக்குவங்களுடன்
காற்றும் பூக்களும்
காதலுடன் மோதியதை கண்டு......
மனதினுள் தோன்றிய நுண்ணுணர்வால்
சிறு வண்டாய் சிறகடித்த
சிறு மனம்....

இத்தனையுங் கடந்து
வெட்கந் துறந்த மலரின்
மகரந்த வாசனையில் மனம் ஒன்றிப்போன
மயக்கத்தை தழுவிக்கொள்ளும்
இயற்கை மீதான காதலுடன் அவள்

சிப்பிக்குள் ஒளிரும் முத்து அவள்
காத்திருந்து கனியாகிய
பெண்மை........
காலமெல்லாம் மழை தரும் கார் மேகமாகி
அணைத்துக் கொள்கிறாள்
ஈருடலை ஓருடலாக......!

--- தாரிணி-----



No comments:

Post a Comment