Pages

Friday 10 July 2015

நிறமிழந்த வர்ணங்கள்




பிரபஞ்சத்தை ஆட்டி படைக்கும்
பிரமாண்டமான சடங்கு
பத்தரை மாற்று தங்கமாய் 
படியேறும் பதிவிரதைகள்
மஞ்சள் கயிற்றின்
மானம் காக்கும் மங்கைகள்
வீட்டுக்கு விடு வாசப்படி
நாட்டுக்கு நாடு அத்துப்படி
வாழ வந்த குத்து விளக்கு
வாடை காற்றிலும்
கோடை வெம்மையிலும்
தன்னை யுருக்கி எரியும்
அணையா தீபங்கள்
கசக்கி எறியப்பட்ட
கடதாசி மலர்கள்
காலத்தின் சுழற்சியில்
சருகுகளாய் சிக்கி
வெளியேற முடியாமல்
வெந்து பிதுங்கும் கோழைகள்
கிளை பரப்பி துளிர்த்த மரம்
காய் கனி கண்டு
வேரூன்றி விட்டாலும்
வெட்டி விட முடியா
ஒட்டி கொண்ட களைகள்
பாச பந்தங்களுக்காய்
பேதையாய் வாழும்
பெண்மைகள்
தம் நிறம் இழந்த
வர்ணங்கள்..!!!
---தாரிணி ----



No comments:

Post a Comment